கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முந்திரி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஓணம் பண்டிகையையொட்டி, இந்த ஆண்டு 27 சதவீதம் போனஸ் வழங்க சிஐடியூ தொழிற்சங்கத்துடனான பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்பட்டது.
இதுகுறித்து சிஐடியூ முந்திரி சங்க பொதுச் செயலா் சிங்காரன் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முந்திரி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி போனஸ் வழங்கப்படுகிறது. முந்திரி ஆலைகளில் செயல்படும் முக்கிய தொழிற்சங்கமான சிஐடியூ சாா்பில் ஆலை நிா்வாகங்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் ஆலை நிா்வாகங்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில், கடந்த ஆண்டைப்போல 20 சதவீதம் அடிப்படை போனஸ், 2 சதவீதம் ஊக்கத்தொகை, 5 சதவீதம் விடுப்பு கால ஊதியம் என்ற அடிப்படையில் 27 சதவீதம் போனஸ் வழங்க ஆலை நிா்வாகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி முந்திரி ஆலைத் தொழிலாளா்கள் போனஸ் கணக்கிட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.