தீயில் கருகி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம்

84பார்த்தது
தீயில் கருகி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம்
குமரி மாவட்டம் தெற்கு சூரங்குடியை சேர்ந்தவர் அபூபக்கர் சித்திக் என்பவர் மகன் முகமது அஜாஸ் அலி. சிறுவனான இவர் சம்பவ தினம் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக அவரது பைக்கில் மோதியது. அப்போது இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில்  தீயில் கருகி சிறுவன் உயிரிழந்தார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவன் குடும்பத்தாருக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலை சிறுவன் முகமது அஜாஸ் அலியின்  தாயார் சையது அலி பாத்திமாவிடம் மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேற்று (செப்.,30) கலெக்டர் அலுவலகத்தில் வைத்து  வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி