மார்த்தாண்டம்:   கொத்தனாரை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

82பார்த்தது
மார்த்தாண்டம்:   கொத்தனாரை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (40). இவர் கொத்தனார். இவரது தங்கை பியூலா என்பவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த கொத்தனார் பாபு தாஸ் (57) என்பவருக்கும் சொத்துத் தகராறு உள்ளது. இந்த நிலையில் பியூலா வீட்டுக் காம்பவுண்ட் சுவர் கட்டுமானப் பணி நடைபெற்றது. 

அப்போது அவரது அண்ணன் கண்ணதாசனும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த பாபு தாஸ் மற்றும் அவரது மனைவி ராணி (54) ஆகியோர் சேர்ந்து கண்ணதாசனைப் பார்த்து கெட்ட வார்த்தைகளைப் பேசியுள்ளனர். மேலும் இருவரும் கண்ணதாசனைக் கீழே தள்ளிச் சரமாரியாகத் தாக்கினார்களாம். 

இதில் காயமடைந்த கண்ணதாசன் குழுத்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கண்ணதாசன் அளித்த புகாரின் பேரில் பாபு தாஸ், ராணி மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி