குமரி: இளம் விஞ்ஞானிகள் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

50பார்த்தது
குமரி அறிவியல் பேரவை சார்பில்  இளம் விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக நலவாழ்வை உறுதி செய்தல் என்ற தலைப்பின் கீழ் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியானது ஆற்றூர் கல்வியியல் கல்லூரியில் வைத்து நேற்று (செப்.,14) நடைபெற்றது.

குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் அறிமுகவுரையாற்றினார். ஆற்றூர் கல்வியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் பிரசோபு மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சுற்றுச்சூழல் ஆர்வலர் சுதாமதி, ஒருங்கிணைப்பாளர்கள் ஜாண்ரபிகுமார், டாக்டர் ஆர். பி. தன்யா, சுனில்குமார், ஆஷ்லின்ஷாஜி, ஸ்மிதா, திருவேங்கடம், ஜாண்சன், ஷாஜு, பேராசிரியர் சஜீவ், தீபா, விர்ஜின்கோல்டா, சிவநந்து, தீபா, டெசிஜோசப், சிறுபுஸ்பம் ஆகியோர் மதிப்பீடு செய்தனர். 120 இளம்விஞ்ஞானிகள்  திட்ட அறிக்கைகள் சமர்ப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி