அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் பணிக்கொடை அகவிலைப்படி கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், மகப்பேறு அரசு பணி ஊழியர்களுக்கு வழங்குவது போல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (18-ம் தேதி) மாலை நாகர்கோவில் உள்ள வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோமதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அமுதா, சிஐடியு மாநில குழு உறுப்பினர் இந்திரா ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார்கள்.
மேலும் இந்த போராட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை வட்டார அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்கத்தின் சார்பில் தக்கலை பழைய பஸ் நிலையம் பகுதியிலும், திருவட்டாறு வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு என மூன்று இடங்களில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.