மார்த்தாண்டம் மேம்பாலத்தில் உடைந்து விழுந்த குழாய்

63பார்த்தது
மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் பம்மத்திலிருந்து மார்த்தாண்டம் சந்திப்பு வழியாக இரண்டரை கிலோ மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் கனரக இரும்பினால் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது.

மேம்பாலத்தின் மேல் பகுதியில் இருந்து மழை நீர் கீழே சாலை வழியாக செல்ல பிளாஸ்டிக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த பிளாஸ்டிக் குழாய்களில் ஆங்காங்கே பழுதுகள் ஏற்பட்டுள்ளன. மழைக்காலங்களில் தண்ணீர் மேம்பாலத்தில் இருந்து கீழே கொட்டுகிறது.

 இந்த நிலையில் நேற்று (செப்.17) மாலை மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த குழாய் திடீரென உடைந்து கீழே சாலையில் விழுந்தது. அப்போது சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் அச்சமடைந்து அலறி அடித்து ஓடினர்கள்.   ஆனால்  யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. கீழே விழுந்த குழாய் உள்ளே முழுவதும் மண் நிரம்பி காணப்பட்டது. மண் குழாயில் தேங்கி பாரம் தாங்காமல் கீழே விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.   மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி