கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் தக்கலை மது விலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் 7010363173 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பும்படி குமரி ஆட்சியர் அலுவலக நுழைவாயில், பள்ளி கல்லூரி, கடற்கரை மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் பிரவீணா தலைமையில் போலீசார் நேற்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.