ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு.

50பார்த்தது
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் யாதவ தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதை யொட்டி அதிகாலை 4. 30 மணிக்கு ஆதிபராசக்திக்கு 18 வகை யான சிறப்பு அபிஷேகம், அதனை தொடர்ந்து மண்வளம், மழை வளம் பெருகவும், மனித நேயம் வளரவும், இயற்கை சீற்றம் தணியவும் வேண்டி சக்தி பீடத் தலைவர் சின்னத்தம்பி தலைமையில் கூட்டு தியானம் நடைபெற்றது. காலை 6. 30 மணிக்கு பலவகையான காய், கனிகளை படைத்து மகர் தீபாராதனை, 25 ஏழை மகளிருக்கு ஆடைதானமும், தொழில் தொடங்க கருவிகளும் வழங்கப்பட்டது. 7 மணிக்கு அப்பம், அவல், இனிப்பு, கடலை உருண்டை, பழவகைகள், காய்கறிகள் வழங்கி அன்னதானத்தை சக்தி பீடத் துணைத் தலைவர் அருணாச்சலம் தொடங்கி வைத்தார். பின்னர் பூஜையில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சக்தி பீடத் தலைவர் சின்னத்தம்பி கை நீட்டம் வழங்கினார். அதனைதொடர்ந்து பக்தர்கள் கருவறைக்குள் சென்று தமிழில் 108 மந்திரங்கள் கூறி அன்னை ஆதிபராசக்திக்கு குங்கும அர்ச்சனை வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சக்தி பீடத் தலைவர் சின்னத் தம்பி தலைமையில், துணைத்தலைவர் அருணாச்சலம் மற்றும் கிருஷ்ணன் கோவில் சக்தி பீடத்தினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி