நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வடசேரி மார்க்கெட் அருகே நேற்று தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாநகராட்சி சுகாதார அலுவ லர் ராஜராம் தொடங்கி வைத்தார். பேரணி வடசேரி அண்ணா சிலை அருகே இருந்து தொடங்கி மாநகராட்சி அலுவலகம் வரை நடந்தது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் பகவதியப்பன் , மாதவன் பிள்ளை மற்றும் சுகாதார பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.