கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிறை கரையில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் தனி நபர் ஒருவர் மதுபான கூடம் அமைக்க முயற்சி செய்து வருகிறார். இதற்கு அந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுபான கூடத்தை மூட வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ஊர் மக்கள் மனு அளித்தனர்.