கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச. 16) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி வழங்கப்பட்ட 369 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.