கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று (அக். 9) புதன்கிழமையை ஒட்டி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து காவல்துறையினரிடம் மனுக்களை கொடுத்தனர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட எஸ். பி சுந்தரவதனம் உத்தரவிட்டார்.