நாகர்கோவில்: கழிவுநீர் ஓடையை மூட கோரிக்கை.

67பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் மைய பகுதியான மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு கழிவுநீர் செல்லும் ஓடை திறந்து இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த வழியாக தான் பணிமனைக்கு வேலை செல்பவர்களும், பொதுமக்களும் நடந்து செல்லும்போது ஓடையில் தவறி விழுந்து காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீர் ஓடையை மூட சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி