தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வாடகை கட்டடங்களுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெறக்கோரி இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கு முன்பு, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து சங்கங்களின் சார்பாக நடைபெற்றது. இதில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.