பிரபல சர்க்கஸ் நிறுவனங்களில் ஒன்றான ஜம்போ சர்க்கஸ் நிறுவனம் நாகர்கோவில் மாநகராட்சி பொருட்காட்சி திடலில் (அனாதை மடம் மைதானம்) சர்க்கஸ் அரங்கத்தை அமைத்துள்ளது. இந்த அரங்கில் சர்க்கஸ் நிகழ்ச்சி தொடக்க விழா நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.
சர்க்கஸ் அரங்கத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் முத்துராமன், ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி, செல்வ குமார், கவுன்சிலர்கள் சரலூர் ரமேஷ், ராணி ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) முதல் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகளாக நடைபெறுகிறது என்றும் டிக்கெட்டுகளை அரங்கில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும், ஆன்லைன் முறையிலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஜம்போ சர்க்கஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.