உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி மாவட்ட அளவிலான நுகர்வோர் தின விழா சாலை பேரணி இன்று (டிசம்பர் 10) நடைபெற்றது.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில் மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி வரையிலும் பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.