நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வருகி றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மனு வழங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் தங்களது மனுக்களை மாற்றுத்திறனாளி அலுவலகத்தின் கீழ் உள்ள நுழைவு வாயிலில் பதிவு செய்து விட்டு மாடியில் உள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கில் மனுக்களை வழங்கி வந்தனர். புதிய கலெடராக அழகு மீனா பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த வாரம் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது வழக் கம்போல லூயி பிரெய்லி கூட்டரங்கில் நடந்தது. ஆனால் இந்த முறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டு நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது. கூட்ட மானது கலெக்டர் அழகுமீனா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 473 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்க ளிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அழகுமீனா அறிவுறுத்தினார்.