தலக்குளம்: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

52பார்த்தது
தலக்குளம்: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது
கல்குளம் தாலுகா உட்பட்ட தலக்குளம் கிராம அலுவலகத்தில் அலுவலராக அமல ராணி, கிராம உதவியாளர் பேபி என்பவரும் பணி புரிகின்றனர். நெய்யூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (56) என்பவர் ஒப்பந்த பணிகளை எடுத்துச் செய்து வருகிறார். ஒப்பந்த பணிகளைச் செய்ய சொத்து மதிப்பு சான்று வேண்டி தனது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணத்தை காண்பித்து விண்ணப்பித்துள்ளார். அதற்கு 3000 ரூபாய் தந்தால் முப்பது ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு சான்று பெற பரிந்துரை செய்ய முடியும் என்று கறாராக கூறியுள்ளார். 

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம் குமரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குமரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று இன்று 2-ம் தேதி காலை சுமார் 11:30 மணி அளவில் பதுங்கி இருந்தனர். அப்போது ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாய் பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் புகாரரான ஆறுமுகம் கொடுக்கும்போது அருகில் இருந்த கிராம உதவியாளர் பேபி இடம் கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் கூறவே அந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலரின் வேண்டுகோள்படி கிராம உதவியாளர் பேபி வாங்கும்போது மறைந்திருந்த குமரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சால்வன் துரை மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி