தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஆயத்த பயிற்சி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று (04. 04. 2025) பார்வையிட்டு கூறியதாவது: -
தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆயத்த பயிற்சி மையம் ஆய்வு மேற்கொள்ளபட்டது. மாவட்ட ஆயத்த பயிற்சி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கான கற்றல் அடைவுகள், அளிக்கப்படும் பயிற்சிகள் முதலானவை ஆய்வு செய்யப்பட்டன. பயிற்சி மையங்களில் அளிக்கப்படுகிற சிறப்பு பயிற்சிகளில் மாணவர்களின் வருகை, அதன் மூலம் மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது.
மேலும் இயல்முறை மருத்துவரால் அளிக்கப்பட்டு வருகின்ற, பல்வகை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பயிற்சிகள், பயிற்சிகளின் மூலம் மாணவர்கள் பெற்றுள்ள உடல் சார்ந்த முன்னேற்றங்கள் ஆகியவை கேட்டறியப்பட்டன. மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு அலுவலகத்துடன் இணைந்து பள்ளிகளில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவி உபகரணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.