த. மா. கா நிறுவனர் மூப்பனாரின் 93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் உள்ள அபய கேந்திரத்தில் தங்கி உள்ள ஆதரவற்றவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் டி ஆர் செல்வம் இதனை வழங்கினார். இதில் ஏராளமான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.