கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் தொடங்கியது.
மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் இந்த விழிப்புணர் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி கிரி, குடும்ப நல நீதிபதி செல்வகுமார், மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுந்தரய்யா, தலைமை குற்றவியல் நீதிபதி கோபாலகிருஷ்ணன், குமரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளர் (பொறுப்பு) நீதிபதி சிவசக்தி, முதன்மை சார் பு நீதிபதி இருதய ராணி, கூடுதல் சார்பு நீதிபதி அசன் முகமது மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.
சட்ட உதவிகள் சம்மந்தமாக விளக்கம் இந்த பிரச்சாரத்தில் பொதுமக்களுக்கு தெரியபடுத்த உள்ளதாக தெரிவித்தனர்.