ம.பி: சிங்ராலி மாவட்டத்தில் மின் கம்பத்தில் பைக் மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு சரோந்தா கிராமத்திற்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த பைக் மின் கம்பத்தில் மோதியது. இக்கோர விபத்தில், தாதுலால் கோல் (31), சிதாசரண் கோல் (30) மற்றும் ராம்பிரகாஷ் கோல் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.