குளச்சல் லூர்தம்மாள் சிலைக்கு மீனவர் காங். மாலையணிவிப்பு

59பார்த்தது
குளச்சல் லூர்தம்மாள் சிலைக்கு மீனவர் காங். மாலையணிவிப்பு
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங். தலைவராக குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்த ஸ்டார்வின் 2 வது முறையாக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை அகில இந்திய மீனவர் காங். தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஒப்புதலின்பேரில் தமிழ்நாடு மாநில மீனவர் காங். தலைவர் ஜோர்தான் நியமனம் செய்துள்ளார். மீண்டும் குமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங். தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஸ்டார்வின் குளச்சல் விசைப்படகு சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக மீன் வளத்துறை முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் முழு உருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மேற்கு மாவட்ட மீனவர் காங். தலைவர் ஜெரோம், கிழக்கு மாவட்ட செயல்தலைவர் லாலின், மாவட்ட துணைத்தலைவர் ஆஞ்சலீஸ், செயலாளர் ஸ்வீட்டன், மாவட்ட காங். துணைத்தலைவர் தர்மராஜ், நகர காங். தலைவர் சந்திரசேகர் மற்றும் அந்திரியாஸ், பென்சிகர், அருள், மரியரசன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி