அஸ்ஸாமில் உள்ள திப்ருகாவில் இருந்து, தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியை இணைக்கும் ரயில் பாதை தான் இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதை ஆகும். இதன் மொத்த நீளம் 4189 கி.மீ. இந்த ரயில் அஸ்ஸாம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய ஒன்பது மாநிலங்களை இணைக்கிறது. இதன் வழித்தடத்தில் மொத்தம் 58 நிறுத்தங்கள் உள்ளன.