தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (பிப்., 03) விசாரணைக்கு வருகிறது. ஆளுநரை நீக்கக் கோரி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய சுகின் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது. அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.