தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பேருந்து ஒன்றில் 17 வயது சிறுவன் மது போதையில் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்து நடத்துனரிடம் அவருக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கத்தரிக்கோலால் நடத்துனரை சிறுவன் குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து சிறுவன் தப்பியோட முயற்சித்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது.