அண்ணா நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "அண்ணா வழியில் அயராது உழைப்போம். தந்தை பெரியாரின் புகழொளியையும், அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம். நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது! வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள். மக்கள் ஆதரவுடன் லட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்" என்றார்.