நித்திரவிளை போலீசார் நேற்று(செப்.4) இரவு மங்காடு ஆற்று பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு ஒரு பயணிகள் ஆட்டோ வந்தது. போலீசார் நிற்பதை பார்த்ததும் டிரைவர் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.
பின்னர் போலீசார் ஆட்டோவை சோதனை செய்தபோது சிறு சிறு மூடைகளில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. இதை அடுத்து போலீசார் ஆட்டோ மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் ஆட்டோ மற்றும் ரேஷன் அரிசியை நாகர்கோவில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய டிரைவர் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.