பேச்சிப்பாறை அணையில் 5 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்

63பார்த்தது
பேச்சிப்பாறை அணையில் 5 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்  ராஜேஷ் குமார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: - 
       குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு உள்ளது. இந்த ஆற்றுப்படுகையில் மங்காடு பகுதியில் இருந்து குழித்துறை வரை பல்வேறு குடிநீர் திட்ட கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் உப்புவதை தடுக்க பரக்காணியில் தடுப்பணை அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் கனமழையால அந்தப் பகுதி தடுப்பனையின் பக்கவாட்டில் உடைப்பு ஏற்பட்டு ஆற்றின் போக்கு திசை மாறிவிட்டது. இதனால் தற்போது தேங்காய் பட்டணம் பகுதியில்  முகத்துவாரம் வழியாக கடல் நீரானது சுமார் ஏழு கிலோமீட்டர் ஆற்றில்  உட்புகுந்துள்ளது.  

   இந்த உப்பு நீரை மாற்ற பேச்சுப்பாரை அணையில் இருந்து ஒரு நாள் மட்டும் ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் ஆற்று நீரில் கலந்து உள்ள உப்பு நீர் முழுவதும் முழுமையாக வெளியேறவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தாமிரபரணி ஆற்றில் கலந்துள்ள உப்பு நீரை முழுமையாக வெளியேற்ற, பேச்சிப்பாறை அணையிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி