மருத்துவ கழிவு கொட்ட வந்த வாகனங்கள் சிறைபிடிப்பு

80பார்த்தது
மருத்துவ கழிவு கொட்ட வந்த வாகனங்கள் சிறைபிடிப்பு
புதுக்கடை அருகே விளாத்துறை முதல் நிலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாராயபுரம் அருகே கோயிக்காவிளை கிராமம் உள்ளது. இந்த கிராமம் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ளதால் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும்.
இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக யாரோ மர்ம நபர்கள் கழிவுகளை கொட்டி செல்வது வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீச துவங்கி உள்ளது.
இது குறித்து இப்பகுதி ஊர் மக்கள் ஊராட்சி தலைவர்க்கு தகவல் கொடுத்தனர். தகவலை தொடர்ந்து நேற்று திடீரென இப்பகுதியில் கழிவுகள் கொட்டுவதற்கு வாகனங்கள் வந்தவுடன் இப்பகுதியை சேர்ந்த மக்கள் ஊராட்சி தலைவர் ஓமனாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அவர் புதுக்கடை காவல் நிலையத்திற்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து, கழிவுகள் கொட்ட வந்த வாகனங்களை சிறை பிடித்தனர். 4 மணி நேரம் பேச்சு வார்த்தை நடந்தது. பின்னர் கொட்டிய கழிவுகளைஅப்படியே இந்த வாகனங்கள் மூலம் எடுத்து செல்ல வைத்தனர்.

தொடர்புடைய செய்தி