குமரியில் மத்திய அமைச்சர் அமித்ஷா வாகன பேரணி 13ஆம் தேதி

586பார்த்தது
குமரியில் மத்திய அமைச்சர் அமித்ஷா வாகன பேரணி 13ஆம் தேதி
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் களம் இறக்கப்பட்டுள்ளார்.   விளவங்கோடு சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தலில்  நந்தினி என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார்.

       பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே  குமரி மாவட்டத்திற்கு வந்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிற 13-ஆம் தேதி சனிக்கிழமை குமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

        நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் காலை 8: 30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம்  வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு தக்கலை மேட்டுக்கடைக்கு செல்கிறார். பின்னர் தக்கலை - திருவனந்தபுரம் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் வாகன பேரணியில் அமித்ஷா கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

     இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையும் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அமித்ஷா வருகை ஒட்டி குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி