அசாம் கம்ரூப் மாவட்டத்தில் வருகிற மே 7ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்கள் ஒரு புதுமையான திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அதன்படி, தங்களது வாக்குரிமையை பயன்படுத்தக் கோரி நேற்று (ஏப்ரல் 9) தங்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினர். 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய இந்த பிரச்சாரத்தை மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.