காஞ்சாம்புரம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

57பார்த்தது
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் அம்மன் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.
ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், வரலட்சுமி விரதம் உள்ளிட்ட நாட்கள் சிறப்பு வாய்ந்ததாக கரு தப்படுகிறது. இதே போல் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழ மைகளும் விஷேசமாகும். இதில் ஆடி பெருக்கு விழா இன்று கொண்டாடப்ப டுகிறது.
குமரி மாவட்டத் தில் கோயில்களில் ஆடி பெருக்கையொட்டி சிறப்புபூஜைகள் நேற்றும் இன்றும் நடந்தன. காஞ்சாம்புறம் பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி பெருக்கு விழாவை யொட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாங்கல்ய பூஜை நடத்தினர்.
கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வழிபாடு செய்தனர். புதுமண தம்ப திகள் தாலி கயிறு மாற்றிக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி