கொல்லங்கோடு அருகே கிராத்தூர் கரியறை பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் சட்ட விரோதமாக செம்மண் அள்ளி கடத்தி செல்வதாக கொல்லங்கோடு தனிப்பிரிவு ஏட்டு சஜிகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தனிப்பிரிவு ஏட்டு சென்ற போது , டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
தொடர்ந்து டெம்போவை சோதனை செய்த போது, அதில் செம்மண் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிப்பிரிவு ஏட்டு சஜிகுமார் டெம்போவை பறிமுதல் செய்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.