"நான் மற்ற மத சகோதரர்களுக்கு எதிரானவன் அல்ல. வக்ஃபு வாரிய தலைவர் என்ற முறையில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சில நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்றுதான் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் பிரச்னையை வேறு ஏதோ திசையில் கொண்டு சென்று விட்டனர்" என ராமநாதபுரம் எம்.பி.நவாஸ் கனி கூறியுள்ளார்.