கடற்கரை என்றாலே அங்கு ஆர்ப்பரிக்கும் அலையும், அங்கு வீசும் குளிர் காற்றும் மனதை கொள்ளை கொள்ளும். கடற்கரைக்கு செல்லும் பாதையே பிரமிப்பூட்டும் விதமாக காட்சி அளித்தால் எப்படி இருக்கும். இந்தோனேசியாவின் பாலி நகரில் அமைந்திருக்கும் பாண்டவா கடற்கரை சாலை அப்படியான ஒரு சாலை தான். மலையை குடைந்து அமைக்கப்படுவது போல உயரமான நிலப்பரப்புக்கு நடுவே இந்த சாலையை மிக அழகாக அமைத்திருக்கிறார்கள்.