கொல்லஞ்சி ஊராட்சி தலைவி குறித்து அவதூறு எஸ்பியிடம் மனு

68பார்த்தது
கொல்லஞ்சி ஊராட்சி தலைவி குறித்து அவதூறு எஸ்பியிடம் மனு
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி நல அமைப்பு சார்பில் அதன் மாவட்ட தலைவர் அஜித்குமார் தலைமையில் மாவட்ட எஸ்பியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொல்லஞ்சி ஊராட்சி தலைவி சலோமி சோபிதாஸ். இவர் குமரி மாவட்ட ஊராட்சி நல அமைப்பு உறுப்பினராக உள்ளார். சலோமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சமுக விரோதிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறு செய்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

இதனால் ஊராட்சி தலைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளனர். மேலும் இது அவரது பொது வாழ்க்கையை கெடுக்க செயல்படுவதாகும். எனவே அவதூறு பரப்புகின்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி