நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி  பொதுமக்கள் சாலை மறியல்

51பார்த்தது
அருமனை பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் நகை அடமானம், பணம் முதலீடு செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை வேறு நிதி நிறுவனங்களில் கூடுதல் தொகைக்கு மறு அடமானம்  வைத்து சுமார் ரூபாய் 10 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை அந்த நிதி நிறுவனம் திறக்கப்படவில்லை.   
    பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அருமனை சந்திப்பு பகுதியில் இன்று 12-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த அருமனை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மனு அளித்தனர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
     எனவே இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட ஏராளம் பேர் இன்று பகல் 11 மணியளவில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் இருந்து அருமனை சந்திப்பு வரை ஊர்வலமாக சென்றனர். மோசடி செய்த பணம் நகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்மந்தப்பட்டவர்களை  கைது செய்ய வேண்டும் என அறிவுறுத்தி கோஷங்கள் எழுப்பியதுடன்,   திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமாதேவி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டக்காரர்களை வலுக்கட்டமாக படித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி