வாட்ஸ்அப்பில் யார் யார் நமக்கு மெசேஜ் அனுப்ப முடியும் என்பதை நாமே தீர்மானிக்கும் முக்கிய அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியிடவுள்ளது. ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் முயற்சியாக வாட்ஸ்அப் இந்த அம்சத்தை சோதனை முயற்சியாக பீட்டா வெர்சனில் சோதித்து வருகிறது. இந்த புதிய அம்சம் இன்னும் சில மாதங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் இந்த அம்சம் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.