குருவிக்காடு அந்தோணியார் ஆலய பீடம் அர்ச்சிப்பு விழா நாளை

63பார்த்தது
குருவிக்காடு அந்தோணியார் ஆலய பீடம் அர்ச்சிப்பு விழா நாளை
திருவட்டார் அருகே திருவரம்பு - குருவிக்காடு புனித அந்தோணியார் ஆலய பங்கு பாதுகாவலர் விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட பீடம் அர்ச்சிப்பு விழா ஆகியன நாளை நடக்கிறது.
நாளை மாலை 5 மணிக்கு குருவிக்காடு சந்திப்பில் பாளையங்கோட்டை மேதகு ஆயர் ஜூடு பல்ராஜ்க்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பாதுகாவலர் விழாவுக்காக திருக்கொடி ஏற்றப்படுகிறாது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மறைமாவட்ட அருட்பணியாளர்கள் மற்றும் முன்னாள் பங்கு அருட்பணியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
2. ம் நாள் (2. ந்தேதி) மாலை மாலை 6. 30 மணிக்கு மறைமாவட பொருளாளர் அருட்பணியாளர் பி. அகஸ்டின் தலைமையில் வட்டம் பங்கு பணியாளர் அருளுரையுடன் திருப்பலி கொண்டாட்டம், 3, 4 -ம் நாள் மாலை 6. 30 மணிக்கு திருப்பலிக்கொண்டாட்டம் ஆகியன நடக்கிறது.
5. ம் நாள் காலை 8. 30 மணிக்கு திருச்செபமாலை, திருப்புகழ்மாலை, காலை 9 மணிக்கு பள்ளியாடி பங்கு அருட்பணியாளார் டி. ஜெரால்டு ஜஸ்டின் தலைமையில், சுங்கான்கடை தூயசவேரியார் கத்தோலிக்க தாதியர் கல்லூரி தாளாளர் அருட்பணியாளர் செயப்பிரகாஷ் அருளுரையுடன் திருப்பலிக்கொண்டாட்டம் மதியம் 12. 30 மணிக்கு திருத்தேர் பவனி, கொடியிறக்குதல் ஆகியன நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் எ. ஒய்சிலின் சேவியர், பங்கு அருட்பணிபேரவைர், பங்குஅருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி