குலசேகரம்: வேகமாக சென்ற டாரஸ் லாரி ; சிறை பிடித்த மக்கள்

81பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு அதிக எடையுடன் கூடிய கல், மண், எம் சான்ட், என் சான்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட லாரிகளில் இரவு பகலாக கொண்டு செல்லப்படுகிறது. அதிக லோடு எடுக்க வேண்டும் என்பதற்காக டிரைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு லாரிகளை ஓட்டுகிறார்கள்.       இதனால் சாலைகள் சேதம் அடைந்து பல விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் வாகனம் ஓட்டுபவர்கள் கண்டு கொள்வதில்லை.  இந்த நிலையில் தற்போது  பள்ளி கல்லூரிகள் திறந்து உள்ளதால் காலை  மாலை வேலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.        இந்த நிலையில் நேற்று இரவு அதிக வேகமாக சென்ற  ஒரு டாரஸ் வாகனம் குலசேகர அருகே மாமுடு பகுதியில் பைக்கில் சென்ற ஒருவரை மோதி விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது.  உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் லாரியை மடக்கி சிறை பிடித்தார்கள். இது குறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.        போலீசார் அந்த பகுதியில் சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு டிரைவரை விசாரித்த போது அவர் வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த சேது குமார் (48)என்பதும், அவர் மது அருந்திவிட்டு வாகன ஓட்டியதும் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து வாகனத்தை போலீஸ் நிலையம் கொண்டு சென் றனர்.

தொடர்புடைய செய்தி