கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கொல்லங்கோடு நகர காங்கிரஸ் கமிட்டி கூட்டம் தலைவர் பால்ராஜ் தலைமையில் இன்று (2-ம் தேதி) நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் முன்னிலையில், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கொல்லங்கோடு நகராட்சியில் வாக்குச்சாவடி வாரியாக காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கிராம கமிட்டிகள் அமைத்து கட்சி வளர நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை நடைபெற்றது. காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நல்லுதவிகள் வழங்கப்பட்டன.