நித்திரவிளை அருகே பூசாரி வீட்டில் திருடிய வாலிபர் கைது

81பார்த்தது
நித்திரவிளை அருகே பூசாரி வீட்டில் திருடிய வாலிபர் கைது
அருமனை பகுதியில் நேற்று (29-ம் தேதி) காலையில் வாலிபர் ஒருவர் குத்துவிளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களை கடை ஒன்றில் விற்பனை செய்ய முயற்சி செய்தார். அப்போது பொதுமக்கள் அவரை பிடித்து அருமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் மேல்பாலை பகுதியை சேர்ந்த பிபின் (35) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் நித்திரவிளை அருகே வாவறை பகுதியில் உள்ள கோயில் பூசாரி சந்திரசேகரன் (79) வீட்டில் இருந்த 2 வெண்கல குத்து விளக்குகள், 2 பூஜை தட்டுகள், 2 கெண்டி, சூலம், செம்பு, செல்போன் ஆகியவற்றை திருடியது தெரிய வந்தது. இது பற்றி சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து பிபினை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி