தோவாளையில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இதன் அருகிலும் , சுப்பிரமணியபுரம் எனும் குடியிருப்பு பகுதியும் அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் ஆகும். இங்கு 60 வீடுகளும் 2 காலிமனைகளும் உள்ளன. இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தையும் , வீடுகளையும் அளவீடு ( சர்வே ) செய்து எல்லை கல் போடும் பணி நடந்தது. இதில் மாவட்ட அறநிலையதுறை தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் , உறுப்பினர்கள் ராஜேஷ் , சுந்தரி , தேவசம் நில அளவை அலுவலர் அய்யப்பன் , கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் , ஒய்வு பெற்ற தாசில்தார் தங்கவேலு , ஸ்ரீகாரியம் சேர்மராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவீடு மூலம் எல்லைக் கல் பதிக்கும் பணி நடந்தது. இந்த பணி நடைபெறும் போது குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கு திரண்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. அளவீடு செய்து கல் போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.