100 நாள் வேலை திட்டம்.. நிலுவைத் தொகையை விடுவிக்க கோரிக்கை

53பார்த்தது
100 நாள் வேலை திட்டம்.. நிலுவைத் தொகையை விடுவிக்க கோரிக்கை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை விடுவிக்கக் கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வலியுறுத்தியுள்ளார். அவருடன், திமுக எம்பி கனிமொழி, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் இருந்தனர். முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜன.13ஆம் தேதி அன்று, இதுகுறித்து பிரதமருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

தொடர்புடைய செய்தி