ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்த முக்கிய தகவலை இந்திய மருத்துவ சங்கத்தின் ஹரியானா பிரிவு அறிவித்துள்ளது. அதில், “400 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதால், வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 600 தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்து சேவைகளை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நிறுத்தி வைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. நலிவடைந்த பிரிவினருக்கு மருத்துவ உதவிகள் மற்றும் வசதிகளுடன் உதவுவதற்காக மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது.