வடிவேலு பட பாணியில் 4 பேரை திருமணம் செய்த பெண்

56பார்த்தது
வடிவேலு பட பாணியில் 4 பேரை திருமணம் செய்த பெண்
மயிலாடுதுறை: சீர்காழியில் தன்னை மருத்துவர், அரசு ஊழியர் எனக் கூறிக்கொண்டு 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த நிஷாந்தி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், 2010, 2017, 2021ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து நிஷாந்தி 3 திருமணங்களைச் செய்திருக்கிறார். தொடர்ந்து, இந்தாண்டு ஜன. 20ஆம் தேதி சிவச்சந்திரன் என்பவருடன் 4வது திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பார்த்த 2ஆவது கணவர், போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி