மதகஜராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி மீண்டும் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அடுத்ததாக சுந்தர் சி 'கலகலப்பு 3' படத்தை இயக்க உள்ளார். கலகலப்பு 3 படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய பின்னர் இவர்களின் கூட்டணியில் புதிய படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய படம் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.