திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கல்குவாரி நீரில் மூழ்கி தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் உயிரிழந்தனர். வேம்பாலையத்தில் உள்ள செயல்படாத கல்குவாரியில் துணி துவைக்க சென்றபோது மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், மூவரின் உடல்களையும் மீட்டனர். இதற்கிடையே அங்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.