குஷ்புக்கு பதிலடி கொடுத்த கனிமொழி எம்பி

54பார்த்தது
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கனிமொழி எம்பி எந்த கருத்தும் கூறவில்லை என குஷ்பு குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தூத்துக்குடி சென்ற கனிமொழி எம்பியிடம் இன்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “நான் அந்த விவகாரம் குறித்து கருத்து கூறியிருக்கிறேன். பாஜகவின் குஷ்புவை சமூக வலைதளத்தில் முதலில் செக் பண்ண சொல்லுங்க” என்றார்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்

தொடர்புடைய செய்தி